தமிழகம்

தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகளின் கட்சியின் அறிவிப்பு

87views
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக சொத்துவரி மின் கட்டண வரி செலுத்திய வீட்டை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துள்ளது என்று கூறி 22 – 11 -2022 அன்று காலை இடித்து தரை மட்டமாக்கி விட்டார்கள். அருகில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற தாசில்தார் சுந்தரவடிவேலுவின் வீடு உள்ளதால் அவர் கொடுத்த புகாரின் பெயரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இளையராஜா வசித்து வந்த வீட்டை இடித்தது தொடர்பாக 23 – 11 – 2022 காலை 11 மணியளவில் பெரியகுளம் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்து விளக்கம் கேட்டு அரை மணி நேரம் பேச்சு வார்த்தையும் நடந்தது. பேச்சுவார்த்தையில் பட்டியல் சமுதாயத்தின் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் என்ன? 25 – 11 – 2022 அன்று நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி *தொடர் முழக்கபோராட்டம்* நடைபெறஉளளதாக தேனி . கிழக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்கரை பேரூர் பெரியகுளம் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!