தமிழகம்

விக்கிரமங்கலம்அருகே ஆக்கிரமிப்பை அளக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

117views
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவிலாங்குளம் மற்றும் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உறவினர் அவர் புதிதாக கட்டியுள்ள காம்ப்ளக்ஸ் கட்டடத்திற்கு செல்லும் வழியில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இன்று வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இடம் அளக்கப்பட்டது.  இதனால் அந்த பகுதியில் குடியிருந்தவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தாங்கள் எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என அதிகாரிகள் மற்றும் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் பொதுமக்கள் யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் மனு அளித்தவரே ஆக்கிரமித்து உள்ளதாகவும் கூறினர் இதனால் செய்வதறியாது திகைத்த வாலாந்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தான் வந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டு நேரில் வந்த மதுரை மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன் பொது மக்களின் கோரிக்கை ஏற்று ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து முறையாக விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் ஆக்கிரமிப்பு எனக்கூறி அளக்க வந்த அதிகாரிகள் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி விட்டு சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!