தமிழகம்

“உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்” திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா ஆலோசனை

57views
இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகளை திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா , இணை பேராசிரியர் திரு விஜயராகவன் மற்றும் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக உள்ளது.
பருத்தி சாகுபடி செய்துள்ள உழவர்களின் கவனத்திற்கு,  உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்.
அறிகுறிகள் – தத்துப்பூச்சிகள் இலையில் சாற்றினை உறிஞ்சும். இலையில் அதனால் சுருக்கங்கள், மேடுபள்ளங்கள்; காணப்படும் மஞ்சள் நிறம் இலையின் ஓரங்களில் இருந்து பரவும். கருகலும் ஓரங்களில் இருந்து ஆரம்பித்து பரவும் தத்துப்பூச்சியால் தாக்கப்பட்ட செடியின் இலைகள் காய்ந்து விழுவதால் செடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
கட்டுப்பாடு – பருத்தி தத்துப்பூச்சியினால் பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு 40 கிராம் தயாமீதாக்சம் அல்லது இமிடாகுளோபிரிட் ஏக்கருக்கு 40 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் செடிகள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம்.
மருந்துக் கரைசலைத் தெளிக்கும் போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், இன்ட்ரான் – வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். என திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா தெரிவிக்கிறார் எனவே விவசாயிகள் இதனை கடை பிடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!