Uncategorized

எடப்பாடியார் நிதிகள் ஒதுக்கி தொடங்கிய திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

100views
மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவில் எதிர் திடலில் அதிமுக சார்பில் இணைப்பு விழா நடைபெறுகிறது. அதற்காக விழா மேடை அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர் R.B,உதயகுமார் Dr சரவணன் ஆய்வு செய்தனர்.  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வருகின்ற பிப்ரவரி 5,ம்தேதி Dr,சரவணன் ஏற்பாட்டில் ஐந்தாயிரம் பேர் அதி முக வில் இணையும் விழா தொடர்பாக இன்று இடத்தை ஆர் பி உதயகுமார் டாக்டர் சரவணன் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருநாளன்று காலை 9 மணி அளவில் 5 ஆயிரம் பேர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைய உள்ளனர்.விழா டாக்டர் சரவணன் தலைமையில் நடக்க உள்ளது. அவனியாபுரத்தில் உள்ள வலையங்குளம் கருப்பசாமி கோவில் மேடைகள் அமைக்கும் பணி டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது குறித்த கேள்விக்கு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. பூத் வாரியாக களப்பணிகள் ஆற்ற திட்டமிட்டுள்ளோம். மெகா தேர்தல் குழுவை எடப்பாடி அறிவித்த பின்னர்.தான் அனைத்து கட்சிகளும் அதற்கு அடுத்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதற்காக தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடி தலைமையில் நேற்று எட்டு மணி நேரத்திற்கு மேல் ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகள் பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடியார் முதல்வராக வரும் அச்சாரமாக இந்த ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என ஈரோடு பொதுமக்களிடம் தெரிகிறது.  திராவிட அரசு இந்த 18 மாத காலமாக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காத்தில் பறக்க விட்டு உள்ளனர். எடப்பாடியார் நிதிகள் ஒதுக்கி தொடங்கிய திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.
தொடர்ந்து டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், பிப்ரவரி 5ஆம் தேதி காலை 9 மணி அளவில் வெவ்வேறு கட்சிகளில் இருந்து குறிப்பாக இளைஞர்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் அனைத்திந்திய அதிமுகவில் இணைய உள்ளனர் என Dr, சரவணன் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!