தமிழகம்

விபத்தில் வாட்ச்மேன் சாவு வாலிபர் மீது வழக்கு

100views
கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பெரிய புனல்வாசல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை( 75 ) இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார் கடந்த 30ஆம் தேதி இரவு மாத்திரை வாங்க ரோட்டை கடந்த போது அவ்வழியாக வந்த டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனை சேர்த்தனர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவர் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கெங்கவல்லி போலீசார் விபத்தை ஏற்படுத்திய தெடாவூர்புதூரைச் சேர்ந்த கருப்பண்ணன் (27 )மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!