தமிழகம்

ரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி

223views
மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் முத்துப்பட்டி ரயில் தண்டவாளத்தில் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு மாடக்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த சுப்பிரமணியபுரம் போலீசார் மற்றும் மதுரை ரயில்வே காவல்துறையினர் மற்றும் மாடக்குளம் கிராம நிர்வாக அதிகாரி பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ரயில் மோதிய விபத்தில் சிதைந்து கிடந்தது இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை உடலை கைப்பற்றிய மதுரை ரயில்வே போலீசார் உடற்கூறு ஆயுளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்த மதுரை ரயில்வே காவல்துறையினர் இவர் தண்டவாளத்தில் கடக்கும் போது விபத்தில் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!