தமிழகம்

மதுரை டிவிஎஸ் நகர் பகுதிகளில் காலை 7 மணி வரை பால் வராததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி. தனியார் பால் விற்பனையாளருக்கு துணைப் போவதாகவும் குற்றச்சாட்டு

60views
கடந்த சில தினங்களாக மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று (25-02-2023) காலை மதுரை டிவிஎஸ் நகர் பழங்காநத்தம், முத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால் காலை 7 மணி வரை வராததால் ஆவின் முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த ஒரு வாரமாகவே இது போன்ற தாமதம் ஏற்படுவதாகவும், மதுரையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் குறித்த நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதாகவும் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு வர தாமதமாக்குவதாக ஆவின் முகவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாமதமாகும் காரணத்தால் தங்கள் வீட்டில் இருக்கும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், தனியார் பால் விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதாகவும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!