தமிழகம்

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

190views
அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் தமிழக முழுவதும் இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றிய கழகம் சார்பாக தளவாய்புரம் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் முருகேசன் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் மாவட்ட இணைச் செயலாளர் அழகுராணி நகர மகளிர் அணி செயலாளர் ராணி ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் துரைச்சி மாவட்ட போக்குவரத்து கெளரவ தலைவர் குருசாமி ஸ்ரீராம் முருகன் ஜீவானந்தம் கணேசன் ஒன்றிய அவைத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!