தமிழகம்

ராமேஸ்வரம், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் அதிமுக ஆர்ப்பாட்டம்

44views
தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசியதாவது:
கடந்த 18 மாத ஆட்சியில் எந்தவிதமான நல திட்டமும் மக்களை சென்றடைய வில்லை. ராமேஸ்வரத்திற்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வில்லை என்றார். ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் முறையாக தரிசனம் செய்வதில் முறைகேடு உள்ளிட்டவைகளை கண்டித்து  முழக்கமிட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  அதிமுக நகர் செயலாளர் கே.கே. அர்ச்சுணன் ஏற்பாடு செய்தார்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார்.  மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், நகர் துணை செயலர் ஆரிப் ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் எம்.எஸ்.தர்வேஷ், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஏ.சரவண குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.  நகர் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாடு செய்தார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!