தமிழகம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐமுமுக ஆர்ப்பாட்டம்

119views
வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஐமுமுக (ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சார்பில் ராமநாதபுரம் சந்தை திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட சத்திய பிரசார பேரவை செயலர் ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் கிராத் ஓதினார். மேற்கு மாவட்ட தலைவர் பாகிர் அலி வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட செயலர் ராவுத்தர் நய்னா முகமது, மேற்கு மாவட்ட செயலர் சமீயுல்லாஹ், கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா நஜுமுதீன், மேற்கு மாவட்ட பொருளாளர் முகைதீன் அப்துல் காதர், கிழக்கு மாவட்ட துணை தலைவர் முகமது சிராஜுதீன், மேற்கு மாவட்ட துணை தலைவர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐமுமுக மாநில பொதுச்செயலர் பாளை ரபீக், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில தலைவர் குடந்தை அரசன், ஐமுமுக மாநில செயலர் அன்வர் அலி, தலைமை கழக பேச்சாளர் ஜாகிர் உசேன், விசிக மண்டல செயலர் முகமது யாசின், எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அருஷி, இந்திய கம்யூ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகபூபதி, மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலர் செல்வராஜ், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலர் ரஞ்சித் குமார் பேசினர். ஐமுமுக ராமநாதபுரம் நகர் தலைவர் மன்சூர் அலி நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!