தமிழகம்

மதுரை மாநகராட்சி வைகை ஆற்று கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

179views
மதுரை மாநகராட்சி 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வைகை ஆற்றுக் கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் நகரமைப்பு பிரிவின் அலுவலர்களால் குழு அமைக்கப்பட்டு, தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், மாநகராட்சி சுகாதார பிரிவின் மூலம் சாலைகளில் இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள், குதிரைகள், நாய்கள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் மாநகராட்சி செல்லூர் பணிமனையில் உள்ள காப்பகத்தில் தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி வார்டு எண்.43 மற்றும் 49க்கு உட்பட்ட வைகை தென்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது (ஒபுளாப்படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கடைகளின் பழைய மரக்கட்டைகள், கதவு, ஜன்னல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 8 டிராக்டர்கள் கொண்டு மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு அப்பொருட்கள் மாநகராட்சி பொது பண்டக சாலையில் ஒப்படைக்கப்பட்டது. இது போன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஷர்பூதீன் மற்றும் மண்டலம் 4 ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாளர்கள் உட்பட மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!