இந்தியாசெய்திகள்

வெளிநாடுகளில் இந்திய மாணவர்களின் தனிமைப்படுத்தல் வசதிக்காக ஆதர் பூனவல்லா ரூ.10 கோடி நிதி

49views

வெளிநாடுகளில் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் கரோனா தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா ரூ.10 கோடிநிதி உதவி வழங்கி உள்ளார்.

கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டவர்களை மட்டுமேசுதந்திரமாகப் பயணிக்க உலக நாடுகள் அனுமதிக்கின்றன.

இதுவரை பைசர், மாடெர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றின் தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் சீரம் நிறுவனத்தின்ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனிகாவின் இந்திய தடுப்பூசியான கோவிஷீல்டுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கும் இன்னும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால்இந்த தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதற்கு குறிப்பிட்ட அளவுக்கு செலவுகள் ஆகும் என்பதால் அதற்கான நிதி உதவியை வழங்க சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா முன்வந்துள்ளார். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளார்.

ஒரு செய்தி நிறுவனத்தின் கூட்டு நிதி திரட்டல் திட்டத்தின் மூலமாக இந்த நிதி உதவியை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கான செலவுகளுக்கு நிதி உதவி பெற இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு உலக சுகாதாரநிறுவனத்தினால் அவரச பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், 30 நாடுகளில் மட்டுமே இந்த தடுப்பூசி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!