சவூதி அரேபியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) முதல் விலக்கப்படுகிறது.
சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்து வந்த சவூதி அரேபியா, கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டுப் பயணிகளைக் கவா்வதற்காக மின்னணு முறையில் நுழைவு இசைவுகளை (விசா) விநியோக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. எனினும், உடனடியாக கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அதையடுத்து, நோய் பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்கு அந்த நாடு தடை விதித்தது.
அந்தத் தடை, 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது முதல்முறையாக விலக்கப்பட்டுள்ளது.