இந்தியாவுக்கு எதிராக நாளை தொடங்க இருக்கும் ஒருநாள் மட்டும், டி20 அணிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு கேப்டனாக தஸூன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஒருநாள், டி20 தொடா்களில் ஆட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் தொடங்கவுள்ள நிலையில் தஸுன் ஷனகா தலைமையில் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை அணி விவரம்: தஸுன் ஷனகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பொணான்டோ, பானுகா ராஜபட்ச, பதும் நிஸாங்கா, சரீத் அஸலங்கா, வனின்டு ஹஸரங்கா, அஷென் பன்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சண்டகன், அகிலா தனஞ்செயா, ஷிரன் பொணான்டோ, தனஞ்செயா லக்ஷன், இஷான் ஜெயவா்தனே, பிரவீன் ஜெயவிக்கிரமா, அஸிதா பொணான்டோ, கஸுன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உடனா.