சீனாவை எதிர்கொள்ள “ஈகிள்” சட்டம். அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல். வெளியான முக்கிய தகவல்..!!
அமெரிக்க நாடாளுமன்றம் சீனாவின் சவால்களை சமாளிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த “ஈகிள்” சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சீனா இந்தோ-பசுபிக் கடல் பிராந்தியத்தில் கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சீனா செயற்கை தீவுகளை அந்த பகுதிகளில் உருவாக்கி, இராணுவ தளத்தை அங்கு அமைத்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து “குவாட்” என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக்குழு குவாட் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட உலகளாவிய அமெரிக்க தலைமையும், ஈடுபாட்டையும் உறுதி செய்யக்கூடிய “ஈகிள்” சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் “மத்திய கிழக்கு நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணை உதவிகளை சீனா அளிக்கிறது. இந்த ஈகிள் சட்டத்தில் இவை அனைத்தையும் தடுக்க ஆயுதங்கள் அழிப்பு சட்டத்தின் முக்கிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோக்குன் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.