வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஒரு தகவல் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது வாட்ஸ்அப் தகவல்களுக்கு தாங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அத்தகைய தகவல்களை எழுதியவர்களை அத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டன்ர்.
இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் எந்த தகவல் வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என அவர்கள் தெரிவித்தனர்.