இந்தியாசெய்திகள்

ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை

60views

பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப ப் பெற வலியுறுத்தி உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக டெல்லி மாநில எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்களது போராட்டம் ஏழுமாதத்தை கடந்த தை குறிக்கும் வகையில் இன்றயை தினத்தை விவசாயம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை சீர் குலைக்கும் வகையில் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் ஊடுருவலாம் என டெல்லி போலீசாருக்கு உளவுத்துறை கடிதம் எழுதியிருக்கிறது. இந்த கடித த்தின் அடிப்படையில் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்படுகின்றனர். மேலும் சில மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று மதியம் வரை மூடப்படுகின்றன. குறிப்பாக விஸ்வ வித்யாலயா, சிவில் லைன்ஸ், விதா சபா ஆகிய ரயில் நிலையங்கள் இன்று காலை பத்து மணிமுதல் மதியம் 2 மணி வரை மூடப்படும் என்று டெல்லி மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே போபாலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகளுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இனிமேலும் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!