இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ் புக்கில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பேஸ் புக்கில் நிறைய வசதிகள் பேஸ் புக் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் கிளப் கவுஸ், மற்றும் ஸ்பாட்டிபை போன்ற பயன்பாடுகளுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லைவ் ஆடியோ சாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு இது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ஏற்கனவே இருக்கும் சவுண்ட் பைட்ஸ் வசதியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த லைவ் ஆடியோ சாட் விரைவில் அறிமுகமாக உள்ளது.