சினிமாசெய்திகள்

சொன்னதை செய்துகாட்டிய சுசீந்திரன்.. அரசுக்கு ரூ.5 லட்சம் நிதி !!

70views

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குநர் சுசீந்திரன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனைத்து துறையினரும் பொதுமக்களும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், அரசியல் தலைவர்கள், தொழில்துறையினர், திரைப்பிரபலங்கள் என பலரும் அரசுக்கு தாராளமாக கொரோனா நிவாரண நிதி அளித்தனர். இயக்குநர் முருகதாஸ்,லிங்குசாமி, ஷங்கர், அஜித்,விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பலர் நிதியுதவி அளித்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் பயிற்சி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் முழு வருவாயையும் தமிழக அரசின் கொரோனா முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் பயிற்சி அளித்து அதன்மூலம் வந்த மொத்த கட்டணத்தொகை 5 லட்சம் ரூபாயை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

இதன்மூலம் சொன்னதை செய்துக்காட்டிய இயக்குநர் சுசீந்திரனுக்கு பாராட்டு என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!