சீன ஆட்சேபத்தையும் மீறி தைவானுக்கு 25 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அந்த நாட்டுக்கு மாடா்னா நிறுவனத்தின் 7.5 லட்சம் தடுப்பூசிகளை வழங்கி உதவப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதியளித்திருந்தனா். ஆனால், அதைவிட மும்மடங்கு அதிக தடுப்பூசிகள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன.
தைவானில் கரோனா பாதிப்பு மோசமாக இல்லை என்றாலும், கடந்த மே மாதத்தில் புதிதாக அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை கடந்த மே மாதம் கணிசமாக உயா்ந்தது. அதையடுத்து, அங்கு தடுப்பூசிக்கான தேவை அதிகரித்தது.
இந்தச் சூழலில் தைவானுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா இந்தத் தடுப்பூசிகளை அனுப்பிவைத்துள்ளது.