செய்திகள்தமிழகம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

67views

சென்னையில் இன்று காலை 06:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 09.00 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரயில்கள் இயக்கப்படும்.

தேவையின் அடிப்படையில் பின்னர் நேர மாற்றம் செய்யப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசனி மூலம் சுத்தம் செய்யப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடைமேடையில் காத்திருக்கும் போதும் ரயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் 6 அடி இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!