செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை: போர்ச்சுகலுக்கு அதிர்ச்சியளித்த ஜெர்மனி

70views

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அதிர்ச்சியளித்தது.

யூரோ கோப்பையில் நேற்று “எஃப்” பிரிவில் இருக்கும் போர்ச்சுகல் – ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணியின் ஆதிக்கம் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். ஆனால் அதன் பின்பு ஜெர்மனி வீரர்கள் போர்ச்சுகல் அணியினருக்கு கடுமையான போராட்டத்தை கொடுத்தனர். இதனையடுத்து 35 ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ரூபன் டியாஸ் முதல் கோலை பதிவு செய்தார்.

பின்பு 39 ஆவது நிமிடத்தில் ரஃபேலி குரேரோ மற்றொரு கோலை அடித்ததால், போட்டியின் முதல் பாதியில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின்பு பரபரப்பான முறையில் போட்டியின் இரண்டாம் பாதி தொடங்கியது. இதிலும் போர்ச்சுகலுக்கு நெருக்கடி கொடுத்தார்கள் ஜெர்மனி வீரர்கள். இதில் 51 ஆவது நிமிடத்தில் கை ஹேவர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார். பின்பு 60 ஆவது நிமிடத்தில் ராபின் கோசன்ஸ் ஜெர்மனிக்கான 4 ஆவது கோலை பதிவு செய்தார்.

இதனால் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என போர்ச்சுகல் வீரர்கள் வேகமெடுத்தனர். இதன் பலனாக 67 ஆவது நிமிடத்தில் டிகோ ஜோட்டா போர்ச்சுகலுக்கான 2 ஆவது கோலை பதிவு செய்தார். இதன் பின்பு தடுப்பாட்ட உத்தியை ஜெர்மனி வீரர்கள் கையொண்டனர். இதனால்a போர்ச்சுகலால் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபாரமாக வென்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!