உடல்நிலை பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார்.நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை தொடர்ந்து பெற்று கொண்டிருந்தார்.
தற்போது கொரோனா பரவல் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி பாதிப்புகளை அதிகரித்து வந்தது. அதனால் தனது பயணத்தை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் சிகிச்சையை பெற்று கொள்ள அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்த வரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்.
அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி ஒய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் மருமகனான தனுஷ், தி கிரே மேன் படப்பிடிற்காக அமெரிக்காவில் உள்ளார். தற்போது ரஜினியும் அமெரிக்கா செல்லவுள்ளதால் மகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட குடும்பத்தினரும் இணைந்து கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.