செய்திகள்விளையாட்டு

இந்திய மகளிர் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இங்கிலாந்து

77views

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே பிரிஸ்டலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுட்ண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான லாரென் வின்பீல்டு ஹில், டாமி பீமோன்ட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஸ்கோர் 69 ரன்களை எட்டியபோது, வின்பீல்டு ஹில் 35 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் ஹீதர் நைட்டும் நிலைத்து நின்றாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். மறுமுனையில் பீமோன்ட் 66 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த நாதலி சிவெர் 42 ரன்னிலும், அமி ஜோன்ஸ் 1 ரன்னிலும் வீழ்ந்தனர். 2-வது சதத்தை நெருங்கிய ஹீதர் நைட் 95 ரன்னில் தீப்தி ஷர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 92 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சோத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். முதல் நாள் ஆட்டத்தை பொறுத்தவரை இங்கிலாந்தின் கையே ஓங்கியிருந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!