ஊடகத்துறையில் சாதனைகள் புரிபவர்களை அங்கீகரிக்கும் புலிட்சர் விருது இந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களுக்கு, சீன கம்யூனிச அரசு கட்டாய கருத்தடை செய்வது குறித்தும், அங்கு தொழிலாளர் சட்டத்தை மீறி கூடுதல் நேரம் வேலை வாங்குவது குறித்தும், லண்டன் பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலன், தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மேகா ராஜகோபாலனின் கட்டுரையினை சுட்டிக்காட்டி, ஐநா சபை சீனாவிடம் விளக்கம் கோரியது. எனினும், சீனா குற்றச்சாட்டை மறுத்து வந்த போதிலும்,
பல்வேறு உலக நாடுகள் சீனாவின் மனித உரிமை மீறலுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சீனாவில் உய்குர் இஸ்லாமிய பழங்குடி மக்களுக்கான அநீதியை, உலகறிய செய்த மேகா ராஜகோபாலனுக்கு, தற்போது புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வரும், இந்திய வம்சாவளி பெண்ணான நீல் பேடிக்கு, ‘Local Reporting’ பிரிவில் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான, புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.