பிரித்தானியாவில் சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபர் கூறிய கருத்தால் கடும் கொந்தளிப்பு
பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் கருத்தால் பிரித்தானியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியதிற்க்கும், பிரித்தானியாவுக்கும் இடையே வட அயர்லாந்துக்கு மாமிசம் அனுப்புவது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த பிரச்சனையில் பிரித்தானியா பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரித்தானியாவின் நட்பு நாடாக திகழும் அமெரிக்காவின் அதிபரே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக பேசுவது பிரெக்சிட் ஆதரவாளர்களையும், பிரித்தானியர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இது குறித்து பேசிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதிபர் ஜோ பைடனுடைய மறதியை சுட்டிக்காட்டி அமெரிக்கா தனது கூட்டணி நாடு எது என்பதை மறந்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் போரிஸ் ஜான்சன் மீதான ஜோ பைடனின் இந்த குற்றச்சாட்டு ஏற்கனவே வடஅயர்லாந்தில் நீடித்து கொண்டிருக்கும் பதற்றத்தை தூண்டிவிடும் விதமாக இருப்பதாக ஜோ பைடன் மீது பிரித்தானியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.