இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இதுவரை 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

55views

இந்தியாவில் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 24,24,79,167 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதில் ஜூன் 9 ஆம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை 3,38,08,845 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 4,05,114 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 45 முதல் 60 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை 7,33,23,267 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 1,16,22,718 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அதுபோல 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இதுவரை 6,16,38,580 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 1,95,34,203 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப்பணியாளர்களுக்கு இதுவரை 1,00,12,624 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 69,11,311 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. முன்களப்பணியாளர்களுக்கு இதுவரை 1,64,71,228 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 87,51,277 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செலுத்தப்பட்ட இந்த மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையையும் மத்திய சுகாதார அமைச்சக அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!