கனடாவில் மிருத தீ என்று அழைக்கப்படும் தீ உண்டாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில இடங்களில் தீப்பற்றி எரியும்போது, அந்த தீ முற்றிலும் அணைந்து விடாமல், குளிர்காலத்திலும் கனன்றுகொண்டே இருந்துவிட்டு, யாரும் தூண்டாமலே மீண்டும் எரியத் தொடங்கும். அதை மிருத தீ (zombie fire) என்கிறார்கள். இப்படி ஒரு விடயம் புராணங்களில்தான் இருக்கிறது என கனேடியர்கள் வெகுகாலமாக நம்பி வந்த நிலையில், தற்போது உஷ்ணம் அதிகரித்துக்கொண்டே வருவதால் அது உண்மையாகும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
Laval பல்கலைக்கழக பேராசிரியரான Steven Cumming என்பவர், இதுபோன்ற கதைகளைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், சமீபத்திய ஆய்வுகள் மிருத தீ (zombie fire) உண்மைதான் என நிரூபித்துள்ளன என்கிறார்.