இந்தியாசெய்திகள்

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000! மத்திய அரசின் அதிரடி திட்டம்!

77views

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில், விவசாயிகள் கூடுதல் பயன் பெறும் வகையில் மற்றொரு திட்டத்தில் அவர்கள் இணையலாம். பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 12 மாத தவணைகளில் மாதத்துக்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் இந்த கிசான் மந்தன் திட்டத்திலும் இணைந்து பயனடையலாம் என்பதாகும். நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்சன் வடிவில் நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளும் இந்த மந்தன் திட்டத்தில் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும். 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பங்களிப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு முதலீடு செய்யும் போது ஓய்வுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் வாங்க முடியும் என அத்திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!