235
தமிழ் சினிமா வரலாற்றில் மூத்த பழம்பெரும் இயக்குனலான ஜி.என்.ரங்கராஜன் தனது 90ஆவது வயதில் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் தமிழ் சினிமாவில் கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட புகழ்பெற்ற படங்கள் பலவற்றை இயக்கியவர். இவரது மகன் ஜி.என்.ஆர்.குமரவேலன் யுவன் யுவதி, வாஹா உள்ளிட்ட படங்களை இயக்கிய தற்கால இயக்குனர் ஆவார்.
அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.