உலகம்செய்திகள்

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல; சீனாவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் -இங்கிலாந்து சந்தேகம்

70views

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல; வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ், சீனாவின் ஊகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தி சண்டே டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!