ஐபிஎல் அட்டவணை குறித்த சூப்பர் அப்டேட்… பிசிசிஐ அதிகாரி சொன்ன தகவல்.. புதிய தேதிக்கு மாற்றம்!
ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல – இவருக்கா இவ்ளோ சம்பளம்?
இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடத்தப்படவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள் கால இடைவெளிக்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்காவிட்டால் ரூ.2500 கோடி வரை பிசிசிஐ-க்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. எனவே இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றி அமைக்க பிசிசிஐ கோரிக்கை ஒன்றை வைத்திருந்தது. ஆனால் இங்கிலாந்து வாரியம் அதனை ஏற்கவில்லை.
இதனிடையே ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் – அக்டோபர் மாத இடைவெளியில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அட்டவணைகள் குறித்து எந்த அறிவிப்பு வெளிவரவில்லை. இதற்கு காரணம் சிபிஎல் தொடர்தான்.
வெஸ்ட் இண்டீஸின் உள்நாட்டு தொடரான சிபிஎல் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் ஐபிஎல்-ல் பங்கேற்க முடியாது. எனவே அந்த தொடரை 7 -10 நாட்கள் முன்னதாக நடத்த வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. அப்படி ஒருவேளை சிபிஎல் தொடர் மாற்றி அமைக்கப்பட்டால் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்.18 அல்லது 19ல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், அயல்நாட்டு வீரர்களின் பங்கேற்புக்காக அனைத்து கிர்க்கெட் வாரியங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு அணிகளுடனும் எங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. எனவே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்தும் அடுத்த 10 நாட்களில் ஐபிஎல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.