செய்திகள்தமிழகம்

கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு!

91views

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களுள் சிலர் உயிர் இழக்கும் சமூகங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரைச் சேர்ந்த சின்னராசு என்ற கணித ஆசிரியர் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சின்னராசுவுக்கு சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சின்னராசுவுக்கு கண்களில் திடீரென வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதித்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர், உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சின்னராசு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!