படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் தமிழ் சினிமா துறையில் 1,000 கோடி ரூபா முடக்கம்.
தமிழ்நாடு அரசு கடந்த 2 வாரங்களாக ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளது. இதனால் தமிழ் சினிமாத் துறையின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட துறையின் தயாரிப்பாளர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் அனைத்து படங்களுக்கான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் தளர்வுகளின் படி பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல தயாரிப்பாளர்களின் கருத்தப்படி படப்பிடிப்பு ரத்து மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமை காரணமாக தமிழ் சினிமாத் துறையில் 1,000 கோடி ரூபா வரை முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கிய நடிகர்களான ரஜனிகாந்தின் “அண்ணாத்த”, கமலின் “விக்ரம்”, அஜித்தின் “வலிமை”, விஜயின் “விஜய் 65” ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்.
விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியுள்ளன. அத்துடன் தரமான பல படங்களும் வெளியிட முடியாமல் இருப்பதால் இந்த அளவு பெருந்தொகை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.