219
திருமணமாகி இரு குழந்தைகள் ஆனபின் ஒரு முப்பத்தைந்து வயதுக்கு பிறகு எல்லாமே முடிந்தாகி விட்டதென நினைக்கின்றனர் சிலர்.
உடலும் மனமும் இனி எதற்கும் முன்போல இயங்காது என நினைத்து விடுகின்றனர்.
அதன் பின் தான் ‘எல்லாமும்’ தேவைப்படுகிறது என்பதை மறந்துவிடுகின்றனர்.
இளமை துடிப்புடன் மட்டும் செயல்பட்ட நம் உடல் அனுபவத்துடன் சேர்ந்து அப்போது தான் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
வாழ்க்கையை அழகாக பார்த்த நம் மனம் அப்போது தான் புரிதலோடு பார்க்க தொடங்கும்.
பார்க்கும் அனைத்திலும் ஒரு உணர்வோடு உயிர்ப்போடு இயங்க வைக்கும்.
புதிதாகப் பிறந்தது போல மனதை உற்சாகமூட்டி அழகழாக புதிய உடைகளை அணிந்து புதிது புதிதாக எழுத்துக்களை வாசித்து புதிய பயணங்களை புத்துணர்வோடு மேற்கொண்டு இரண்டாவது அத்தியாயத்தை குடும்பத்தோடு களித்திருங்கள்.
காத்தால சீக்கிரம் எழுந்து காலை டிபன் செஞ்சு அது கூட மதியமும் சேர்த்து லஞ்ச் செஞ்சு குழந்தைகளை குளிப்பாட்டி, எட்டு மணிக்கெல்லாம்
அவர்களை ஸ்கூல் வேனில் ஏத்தி சமைத்து பாத்திரங்கள் கழுவி,
ஊறவைத்த துணிகளை துவைத்து, வீடு மொத்தமாய் பெருக்கி, ஒருத்திக்கு எதுக்கு சமையல்னு இருக்கிறதை அள்ளி போட்டு சாப்பிட்டு, காய்ந்த துணிகளை கொண்டுவந்து வராத பாடத்தை வரவழைக்க வாய்வலிக்க சொல்லித்தந்து ஒரு இயந்திரம் போல வாழும் வாழ்க்கையை வாழ்ந்த வாழ்க்கையை நீங்களும் வாழாதீர்கள்..
ஒரே வாழ்க்கை அனுபவித்து வாழுங்கள்..
-
ஸ்ரீநிவாசன் நிதீஷ்