இந்தியாசெய்திகள்

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி..

60views

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 5 புதிய நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆம்போடெரிசின் பி (Amphotericin-B ) என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை தயாரிக்க அரசாங்கம் புதிதாக 5 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி உள்ளது. இந்த நிறுவனங்கள் ஜூலை மாதம் கருப்பு பூஞ்சை தொற்றை தடுப்பதற்காக 1 லட்சம் 11 ஆயிரம் தடுப்பூசிகளை தயாரிக்கும் என்றும், அதே நேரத்தில், இறக்குமதியை அதிகரிக்கவும் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக நாட்டில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

மருந்து தயாரிக்க அனுமதி பெற்ற 5 புதிய நிறுவனங்கள் விவரம்:

  • NATCO Pharmaceuticals,
  • Alembic Pharmaceuticals,
  • Gufic Bioscience,
  • Emcure pharmaceuticals

Lyka ஆகியவற்றுக்கு அரசாங்கம் இப்போது உரிமங்களை வழங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த நோய்க்கான ஆம்போடெரிசின் பி (Amphotericin-B ) மருந்துகளை Bharat Serum and Vaccines Ltd, BDR Pharmaceuticals, Sun Pharma, Cipla, Life Care Innovation ஆகியவை தயாரித்து வந்தன. தற்போது மேலும் 5 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த நோய்க்கான் மருந்து Mylan Lab நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக ஜூன் மாதத்தில் 5 லட்சம் 70 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்படும் ஏற்கனவே தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பழைய 5 நிறுவனங்கள் மே மாதத்தில் 1 லட்சம் 63 ஆயிரம் 752 டோஸ்களை உற்பத்தி செய்தன. இதனை ஜூன் மாதத்தில் 2 லட்சம் 55 ஆயிரம் 114 டோஸ்கள் என்ற அளவிற்கு உயர்த்தும் திட்டம் உள்ளது.

மே மாதத்தில் 3 லட்சம் 63 ஆயிரம் டோஸ்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தில் 3 லட்சம் 15 ஆயிரம் டோஸ்கள் இறக்குமதி செய்யப்படும். இதனால், ஜூன் மாதத்தில் நாட்டில் மொத்தம் 5 லட்சம் 70 ஆயிரம் 114 தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!