தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது

61views

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொலைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்டொலைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த தொழிநுட்ப குழுவினரும் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் சனிக்கிழமை முதல் இஸ்ரோ குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!