இந்தியா

கோவிட் கேர் செண்டர்களாகும் 16 கோவில்கள்: ஜெகன் மோகன் உத்தரவு!

67views

ந்திராவில் உள்ள கோயில்களில் உள்ள மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாறுகின்றன என ஜெக்ன மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் தினசரி 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மே 31ஆம் தேதி வரை ஆந்திராவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என அறிவித்த அவர் தற்போது ஆந்திராவில் உள்ள கோயில்களில் உள்ள மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாறுகின்றன என தெரிவித்துள்ளார்.

16 பெரிய கோயில்களின் மண்டபங்களில் தலா 1,000 படுக்கைகள் கொண்ட மையமாக மாற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!