இந்தியா

கொரோனா வேகமாக அதிகரிப்பதால் மே 31 வரை ஊரடங்கு!

82views

கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அம்மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது, ஊரடங்கால் நோய் தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!