விளையாட்டு

லா லிகா கால்பந்து டிராவால் பார்சிலோனா பின்னடைவு

86views

ஸ்பெயினின் லா லிகா கோப்பை கால்பந்து போட்டியின் 36வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் பார்சிலோனா எப்சி-லெவான்டே யுடி அணிகள் மோதின. அதில் பார்சிலோனாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. அந்த முயற்சி இரு அணிகளுக்கும் சம வாய்ப்பை அளிக்க ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. டிரா ஆனாதால் ஒரே ஒரு புள்ளி கிடைக்கவே பார்சிலோனா 76 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. வெற்றி பெற்றிருந்தால் 78 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றிருக்கும்.
பார்சிலோனா இதுவரை 36 ஆட்டங்களில் ஆடியுள்ள நிலையில், 77 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் அத்லெடிகோ மாட்ரிட், 75புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் தலா 35 ஆட்டங்களில் மட்டும் விளையாடி உள்ளன. எனவே இந்த அணிகளின் வெற்றி தோல்விகளுடன், பார்சிலோனா எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெறும் வெற்றிதான் அதன் சாம்பியன் கனவை நனவாக்கும். அதனால் லெவான்டேவுக்கு எதிரான டிரா பார்சிலானாவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!