விளையாட்டு

விதிகளை மீறிய பெங்களூரு அணி- ஆசிய கால்பந்து ஒத்திவைப்பு

69views

கோல்கட்டா வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பெங்களூரு – ஈகிள்ஸ் அணிகள் மோதும் ‘பிளே-ஆப்’ போட்டி நடப்பதும் சந்தேகம் . ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி) சார்பில் ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடரின் 18வது சீசன் நடக்கிறது.

இதன் தெற்காசிய மண்டல ‘பிளேஆப்’ போட்டியில், 2018~-19 ஐ.எஸ்.எல்., சாம்பியன், சுனில் செத்ரிதலைமையிலான பெங்களூரு அணி, மாலத்தீவின் ஈகிள்ஸ் அணியை நாளை சந்திக்க இருந்தது. இதில்வென்றால் ‘டி’ பிரிவுலீக்சுற்றில் விளையாட தகுதி பெறலாம்.இதற்காக பெங்களூரு  அணியினர்மே 7ல் மாலத்தீவு சென்றனர். இங்குள்ள அரசின் கொரோனா விதிகளைமீறி, ஓட்டலுக்கு வெளியே பெங்களூருவீரர்கள் சிலர் சுற்றித் திரிந்தனர்.

இதனால் இப்போட்டியை நடத்த முடியாது என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது. மாலத்தீவு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது மக்லுாப் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,’பெங்களூரு வீரர்கள் செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது, இதைநாங்கள்வேடிக்கை பார்க்க முடியாது, இவர்கள் உடனடியாக மாலத்தீவை விட்டு கிளம்ப வேண்டும்,’ எனதெரிவித்துள்ளார்.

இதனால் பெங்களூரு ஈகிள்ஸ் அணிகள் மோதல் நடப்பது சந்தேகமாக உள்ளது.சிக்கலில் கோல்கட்டாலீக் சுற்றுக்கான ‘டி’ பிரிவில், ஐ.எஸ்.எல் கோல் கட்டாமோகன் பகான் அணி இடம்பெற்றுள்ளது.  இதற்கான போட்டிகள் மாலத்தீவில் நடக்கவுள்ளன.

இதற்காக கோல்கட்டாவீரர்களுக்கு சமீபத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பிரபிர்தாஸ், ஷகில் என இருவருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் இப்பிரிவு போட்டிகளை கால வரையின்றி ஒத்திவைப்பதாக ஏ.எப்.சி, அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!