முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்வை கோதிமுக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இது சமம்ந்தமாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:-
தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழுபேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாக வேமனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோல வேநளினி, ரவிச்சந்தின், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தும் ஆளுநர் அந்தக்கோரிக்கையை குப்பைத்தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார். இந்தப்பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக்கேட்க வேண்டிய அவசிய மேகிடையாது. ஆனால்மத்திய அரசிடம் கருத்துக்கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடைபோடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்திவந்தனர்.
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக்கழகம் வலியுறுத்தி வருகிறது. என வேதமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறேன்