பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலர் பலியாகினர். இதனால் அங்கு கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தத்தப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஒரே நாளில் சுமார் 21,712 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,55,750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 26,985 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரே நாளில் சுமார் 273 நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.