இந்தி சினிமா வரலாற்றில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, சாதாரணமக்கள் முதல்அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் நேற்று ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் எல்லோரும் ஒக்ஸிஜன் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றனர்.
அவை இந்தச் சுற்றுச் சூழலிலிர்ந்து எடுத்திருப்பார்கள். எனவே இயற்கையிலிருந்து எடுப்பவர்கள் காற்றிலும் நிவாரணம் கொடுக்க வேண்டும். காற்றின் தரத்தை உயர்த்த நாம்உறுதிமொழி எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்..
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த டுவிட்டர் பக்கத்திலிருந்து அவரது கணக்குஅகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. கங்கனா அடிக்கடி சர்ச்சைக்குரிய தகவல்கள் பதிவிடுவதால் இது போன்ற நடவடிக்கையை டுவிட்டர் நிறுவனம் எடுத்திருக்கலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.