இந்தியா

சிறப்பு ரயில்கள் ரத்து.., தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

126views

10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் குறைவு காரணமாக மே 06 முதல் மே 15 வரை ஆகிய 10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து தினமும் இரவு 7.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப்படும் தினசரி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் காலை 11:35 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

குருவாயூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அதிகாலை 3:25-க்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் ரத்து. திருவனந்தபுரத்திலிருந்து மாலை 5:30 மணிக்கு குருவாயூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ரத்து.

புனலூரில் இருந்து தினமும் மாலை 6:25-க்கு குருவாயூருக்கு புறப்படும் சிறப்பு ரயில் ரத்து. குருவாயூர் – புனலூர் இடையே இருமார்க்கத்திலும் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில்கள் ரத்து.

கோவையில் இருந்து தினம் பிற்பகல் 2:20-க்கு புறப்படும் கண்ணூர் வரை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் ரத்து.

கண்ணுரில் இருந்து கோவை, ஆலப்புழா, எர்ணாகுளம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!