ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் இயக்கத்திற்கும் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இந்தப் போரில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் லட்சக்கணக்காண மக்கள் வாழ்வாராதம் தேடி பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கிருக்கும் முழு துருப்பையும் அமெரிக்கா வாபஸ் பெற்றது அனைவரையும் அழைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நோன்பு தொழுகையின் பின் குண்டு வெடித்து பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆப்கானின் கிழக்கு பகுதியில் உள்ள லோகர் என்ற இடத்தில் அரச விருந்தினர் விடுதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பொறுத்தப்பட்ட குண்டு வெடித்து அப்பிரதேசமே அதிர்ந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் போது அரச விருந்தினர் விடுதியில் 100 உஉயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கியிருந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.