உலகம்

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா வந்தால் 5 ஆண்டுகள் சிறை – அவுஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு…

76views

ந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய நாட்டவர்கள் திரும்பி வருவது குற்றம் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் விகிதத்தினை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை மீறி நாட்டுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் அத்துடன் தனிமைப்படுத்தலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஆரம்பத்திலேயே இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா, இந்தியாவில் சுமார் 9,000 அவுஸ்திரேலியர்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு பதில் அளித்த அவுஸ்திரேலிய அரசு இந்த முடிவு எளிதில் எடுக்கப்படவில்லை, பல கலந்துரையாடல்களின் பின் எடுக்கப்பட்டதென்றும், எதிர்வரும் 14 நாட்களின் பின் இந்த தீர்மானம் குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!