நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது யாவரும் அறிந்ததே. இவருடன் நிலவிற்கு பயணித்தவர்தான் மைக்கல் காலின். 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார்.
விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால் நிலவில் முதலில் காலடி வைப்பது யார் என்ற போட்டி எழுந்தது. இந்த போட்டியில் நாசா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க செய்தமை குறிப்பிடத்தக்கது.
மைக்கெல் காலின்ஸின் மறைவுக்கு விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.