உலகம்

இலங்கையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் முழு விபரம்…

98views

நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது உச்சம் அடைந்து, கடந்த இரு நாட்களாக ஒரு நாளைக்கு 1000 அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுவே கொரோனா தொற்றின் ஆரம்பம் முதல் இதுவரை 1000 இனை கடந்து முதல் சந்தர்ப்பம்.

இதன் எதிரொலியாக நாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது வரை தனிமைப்டுத்தப்பட்டுள்ளன.

அவை தவிர நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றாக விளங்கும் தம்புள்ளை பொருளாதார நிலையமும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள்.

கம்பஹா மாவட்டம்

மினுவங்கொட பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

கொடதெனியாவ பொலிஸ் பிரிவில் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு, ஹீரலுகெதர கிராம சேவகர் பிரிவு மற்றும் களுஅக்கல கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை மாவட்டம்

மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் மிரிஸ்வத்த கிராம சேவகர் பிரிவு, பெலவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு.

குருணாகல் மாவட்டம்

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு மற்றும் நிராவிய கிராம சேவகர் பிரிவு.

வெல்லவ பொலிஸ் பிரிவில் நிகதலுபொத்த கிராம சேவகர் பிரிவு.

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு.

மாத்தளை மாவட்டம்

உக்குவளை பொலிஸ் பிரிவில் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு.

நாஉல பொலிஸ் பிரிவில் அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பொலிஸ் பிரிவில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு.

காலி மாவட்டம்

ரத்கம பொலிஸ் பிரிவில் இம்புலகொட கிராம சேவகர் பிரிவு மற்றும கடுதம்பே கிராம சேவகர் பிரிவு.

பொலன்நறுவை மாவட்டம்

ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவின் சிறிகெத கிராம சேவகர் பிரிவு.

மொனராகல மாவட்டம்

வெல்லவாய பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர் கிராம சேவகர் பிரிவு, வெஹரயாய கிராம சேவகர் பிரிவு மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு

புத்தல பொலிஸ் பிரிவில் ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு.

அம்பாறை மாவட்டம்

உகன பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம சேவகர் பிரிவு.

தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டில் மேலும் பல பாகங்கள் தனிமைப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தொற்றின் வீரியம் காரணமாக தொற்றாளர்கள் அதிகரித்து நாட்டிலுள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!