வணிகம்

இந்தியாவுக்கு உதவும் அண்டை நாடுகள்.. உற்சாகத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. !

125views

டப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று  இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன.

குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 508.06 புள்ளிகள் அதிகரித்து, 48,386.51 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 143.65 புள்ளிகள் அதிகரித்து, 14,485.00 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1841 பங்குகள் ஏற்றத்திலும், 1094 பங்குகள் சரிவிலும், 216 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, இன்றைய உச்சத்தின் அருகில் 74.72 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 16 பைசா அதிகரித்து, 74.85 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் 75.01 ரூபாயாக முடிவடைந்தது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில், பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, பிரிட்டானியா, ஹெச்சிஎல் டெக், பிபிசிஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்பிஐ, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி வங்கி, மாருதி சுசூகி, சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில், பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவுக்கு பல நாடுகளும் உதவ முன் வந்துள்ளன. இதன் காரணமாக சந்தையில் ஏற்றமே காணப்படுகிறது. இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!